எஸ்.கார்த்திகேசு / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

145ஆவது உலக அஞ்சல் திணைத்தையொட்டி, இலங்கையின் கிழக்கு முனையான சங்கமன்கந்தை முனையின் அடையாளத்தைக் குறிக்கும் பெயர்ப் பலகையையும், அவ்விடத்தில் புதிய தபால் பெட்டியையும், அஞ்சல் திணைக்களம் திறந்துவைத்துள்ளது.
இந்நிகழ்வு, அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் தலைமையில், கிழக்கு மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள, சங்கமன்கண்டி பெருந்தெருப் பிள்ளையார் ஆலயத்தின் குரு சிவஸ்ரீ லதீபன்சர்மாவின் ஆசி உரையுடன், நேற்று (09) நடைபெற்றது.
இதேவேளை, பருத்தித்துறை முனை, தெய்வேந்திரமுனை, கொழும்பு, சங்கமன்கந்தை முனை என நான்கு முனைகளுடன் மத்திய இடமான மாத்தளை ஆகிய ஐந்து இடங்களில் இவ்வாறு புதிய தபால் பெட்டிகளும் முனைகளை அடையாளப்படுத்திய பெயர் பலகைகளும் ஒரே நேரத்தில் நிறுவப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago