Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அம்பாறை - கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட அல்- ஜலால் வித்தியாலயத்தில், பாடசாலைக் கட்டடமொன்றை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட 10.9 மில்லியன் ரூபாயை, வேறுபாடசாலைக்குக் கொண்டுசெல்ல கல்முனை கல்வி வலயப் பொறியியலாளர் ஒருவர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலை முன்றலில் நேற்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், இன்றும் (10) முன்னெடுக்கப்பட்டது.
கல்வியமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டமான “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ், மேற்படி கட்டடத்துக்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக, பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் அமைப்பினரும் பெற்றோர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருக்கும் இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தது இரு நாள்களாகப் போராடி வரும் எமது போராட்டத்தின் குரலைக் கேட்க எந்த உயரதிகாரிகளும் இங்கு வரவுமில்லையென, பெற்றோர் கவலை தெரிவித்தார்.
44 minute ago
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
54 minute ago
57 minute ago