2025 மே 19, திங்கட்கிழமை

பொது ஊழியர் சங்கம் டக்ளஸுடன் கைகோர்ப்பு

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கம், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, அமைச்சர் கே.எம்  டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அம்பாறை - கல்முனையில் அமைந்துள்ள  தனியார் விடுதியொன்றில் நேற்று (15) மாலை   எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவை வழங்கப் போவதாக, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இதன்போது  கருத்துத் தெரிவித்த அவர், “தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தினோம். எனினும், கூட்டமைப்பு, எங்களை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. இன்று தொடக்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்” என்றார்.

“தமிழ் தேசியம் கதைத்து எதை கண்டோம். நல்லாட்சியில் கூட ரணில் விக்கிரமசிங்க  எங்களது தமிழ் மக்களுக்கு எதனையும்  செய்யவில்லை. வடக்கு தமிழ் மக்களுக்கான ஒரே ஒரு தலைவர் தேவானந்தா மாத்திரமே. அனைவரும் அவரது கட்சியைப் பலப்படுத்த வாருங்கள்” என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X