Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் கூலித் தொழில் செய்வோர், விதவைகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் கிழக்குவான் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வைபவம், கிழக்குவான் அமைப்பின் தலைவர் ஏ.எல்.சியாத் தலைமையில், பொத்துவில் பிரதேச செயலகத்தில் நேற்று (01) நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொத்துவில் சர்வதேயபுரம், ஹிஜ்றாநகர், குண்டுமடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டில் வாழும் சுமார் 125 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், பொத்துவில் பிரதேச இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன் கேனல் மெதகெதர, சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ. அப்துல் சமத், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக் ஆகியோர் கலந்துகொண்டு, உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago