2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பொன்னாங்காணி பறித்தவர் முதலை தாக்குதலில் பலி

Freelancer   / 2023 மார்ச் 23 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்காணி கீரையை பறித்துக் கொண்டிருந்த ஒருவர், முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

நேற்று மாலை (22) நடந்த இந்தச் சம்பவத்தில், சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த  61 வயதுடைய இராசாப்பு சௌந்தராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை, முதலைத் தாக்குதலில் உயிரழந்தவருக்கு நட்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, பிரதேச செயலக அதிகாரிகள் இன்று (23) காலை 10 மணியளவில் பார்வையிட்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X