2025 மே 05, திங்கட்கிழமை

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிகச் செயலாளர் வீ. ஜெகதீசன், நேற்று (29) தெரிவித்தார்.

பொதுமக்கள்  மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் போது, அத்தியாவசிய தேவைக்கான உரிய ஆவணங்களை, பாதுகாப்புப் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சமர்ப்பித்து  அவற்றை நிரூபித்து பயணங்களை தடையின்றி தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில், அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X