Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் போதைப்பொருள் பாவனையால் நாளொன்றுக்கு 80 பேர் மரணமடைவதாகவும் போதைப்பொருள் பாவனை சுகாதாரச் செலவீனங்களுக்காக அரசாங்கம் 12 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவு செய்துவருவதாகவும், தேசிய மீனவ பெண்கள் சம்மேளனத்தின் பெண்கள் திட்ட இணைப்பதிகாரி லவினா ஹசன்தி தெரிவித்தார்.
தேசிய மீனவ பெண்கள் சம்மேளனம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து நடத்திய போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயலமர்வும், கவனயீர்ப்புப் போராட்டமும், அக்கரைப்பற்றில் இன்று (20) நடைபெற்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம், இளம் தலைமுறையினரைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மீனவ இயக்கத்தின் இணைப்பாளர் கே.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸன், ஆலையடிவேம் பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெகன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சசிதரன், பிரதேச இணைப்பாளர் கே.கன்னண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago