2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போலி ஆவணங்களைத் தயாரித்தவரின் விளக்கமறியல் நீடிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீண்ட காலமாக போலி ஆவணங்களைத் தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் ஏ. பீட்டர் போல், இன்று (19) உத்தரவிட்டார்.

குறித்த நபர், சாரதி அனுமதிப் பத்திரங்கள், விவாக இரத்துச் சான்றிதழ்கள், கடவுச் சீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றை நீண்ட காலமாகத் தயாரித்து, விநியோகித்து வந்த நிலையில், அம்பாறை விசேட புலன் விசாரணைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடந்த 04ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இச்சுற்றிவளைப்பின் போது, இலங்கை, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் அனுமதிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 12, கடவுச் சீட்டு போட்டோப் பிரதிகள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படும் நவீன ரக உபகரணங்கள், கணினி, பிறின்டர் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இந்நபரை, அக்கரைப்பற்று நீதவான் நீதமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர் செய்த போதே, தொடந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .