2025 மே 03, சனிக்கிழமை

புகையிலைத்தூள் வைத்திருந்தவருக்கு ரூ.12 இலட்சம் அபராதம்;

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைத்தூளை மறைத்து வைத்திருந்த ஒருவருக்கு மதுவரித் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின்  அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு தபாலக வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 264 மூடைகளைக் கொண்ட புகையிலைத்தூளை புதன்கிழமை  (8) தாம் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் ஒடிசா பகுதியிலிருந்து இந்த புகையிலைத்தூள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, பீடி உற்பத்தியில் ஈடுபடும் மேற்படி நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X