Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் எமக்கு எதுவிதமான உறுதியான பதிலையும் தங்களுக்கு வழங்காத காரணத்தால் தமக்கு தீர்வு கிட்டும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரி அமைப்பின் தலைவர்.எம்.திலீபன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபோது.இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர அஹமட் இன்று வியாழக்கிழமை காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதன் போது முதலமைச்சர் உறுதியான எதுவிதமான பதிலையும் வழங்காத காரணத்தால் தமக்கு தீர்வு கிட்டும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் தமக்கு உடன் நியமனங்கள் வழங்கவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமையும் கொட்டும் மழையிலும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago