2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொத்தானைப் பள்ளிவாசலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  பொத்தானைப் பள்ளிவாசலைச் சுற்றி தொல்பொருள்  திணைக்களத்தினர் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், இன்று (26) தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் 7ஆம் திகதி இப்பள்ளிவாசலைச் சுற்றி, தொல்பொருள்; திணைக்கள அதிகாரிகள்  எல்லைக் கற்களையும் அறிவுறுத்தல் பலகையை இட்டமையால், அப்பள்ளிவாசலுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கு அசாதாரண சூழ்நிலையும்  நிலவியது.

இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களப்  பணிப்பாளருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும்  இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (25)  நடைபெற்றது. இதன்போது, மேற்படி பள்ளிவாசலுக்குச் செல்லும் தடை நீக்குதவற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன், அதற்கான தடை அறிவித்தல் பலகையை அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X