Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 07 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை கவனத்திற்கொண்டு கிழக்கு மாகாணசபை ஆசிரியர்களை நியமித்து வருகின்றது. இருந்தும், பொத்துவில் பாடசாலைகளில் பாட ரீதியான ஆசிரியர்களுக்கு தற்போது பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே, இது தொடர்பிலும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பொத்துவில் பிரதேசத்தில் தற்போது உப கல்வி வலயம் இயங்குகின்றது அங்கு தனியான கல்வி வலயம் அமையப் பெறவேண்டும். இவ்விடயம் தொர்பாக மாகாணசபையிலும் மாகாணசபையின் அமைச்சரவை வாரியத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
தனியான கல்வி வலயம் அமைவதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் சிபாரிசு, குறித்த அமைச்சுக்கு அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago