2025 மே 21, புதன்கிழமை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று (23) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் போதை மாத்திரைகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உதவி பொலிஸ் பரிசோதகர் ரீ.மேனன் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர், சந்தேக நபரை கைது செய்ததுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான பொதை மாத்திரைகளையும் பொதிய செய்யப்பட்ட சிறிய கஞ்சா பக்கற்றுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேக நபர், பொலிஸ் உத்தியோகத்தர் எனவும்; யுத்தகாலத்தில் காயமடைந்த நிலையில் தொடர்ந்து சேவையில் ஈடுபட முடியாதென மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதற்கமைய, சம்பளம் பெற்று வரும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சந்தேக நபருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நடவடிககையில் பலர் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X