2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அம்பாறை, மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள மாதுறுஓயா, துடுவில காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவரை, இன்று சனிக்கிழமை (12) அதிகாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான புதிய நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக கிராமவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தங்காலை டெடிகம, விதாரந்தெனிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதனையடுத்து சந்தேகநபர்கள் உட்புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்ட காட்டுப்பகுதியைச் சுற்றிவளைப்புச் செய்த பொலிஸார், ஆனந்த விஜேசேகர (வயது 54), கொடித்துவக்கு கமராலகே சுஸந்த சஞ்ஜீவ (வயது 27) ஆகியோரைக் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து சடங்குகள் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மாந்திரீகப் பொருட்களும் கருவிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X