2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொது விளையாட்டு மைதானத்தை புனரமைக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை (12)  நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை தொடர்பான செயலாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த மைதானத்தை பிரதி அமைச்சர் தலைமையிலான குழு பார்வையிட்டதுடன் இம்மைதானத்தை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இம்மைதானத்தின் குறைபாடுகள் மற்றும்; பார்வையாளர் அரங்கு அமைப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபையினர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள்  இதன்போது பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .