Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த சகோதரர்கள் இருவரைக்; கைதுசெய்வதற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை அச்சகோதரர்களில்;; ஒருவர் தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடிய சம்பவம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 18 மற்றும் 21 வயதுடைய சகோதரர்கள் இருவரும்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், நீதிமன்றப் பிணையில் வந்த இவர்கள் இவர்கள் இருவரும் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகி இருந்துவந்தனர்.
இந்நிலையில், இவர்களைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாகியிருந்த இவர்களின் இடத்தைப் பொலிஸார் கண்டுபிடித்து இவர்களைக் கைதுசெய்வதற்கு முற்பட்டுள்ளனர். இதன்போது, 21 வயதுடைய சகோதரரின்; இடதுகைக்கு கைவிலங்கு போடப்பட்டு, வலது கைக்கு விலங்கு போடும்போதே, அவர் மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்கியுள்ளார்.
இவ்வாறு தப்பியோடியவருக்கு உதவியாகக் கூறப்படும் அவரது மனைவி உட்பட 03 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைவிலங்குடன் தப்பியோடியவரை தேடி பொலிஸார் தேடி வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
01 Oct 2025