Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன், பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே பொலிஸ் சேவையின் முக்கிய பொறுப்பாகும். பொலிஸாருக்கு இன,மத,குல பேதங்கள் எதுவும் இல்லை. அனைவரும் இந்த நாட்டின் மக்களே. பதவி,தகுதிகள் பாராது சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்களுக்கான மகிழ்ச்சியான வாழ்கை சூழலை பெற்றுக் கொடுப்பதே தமது கடமை என அம்மாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.தம்பிக்க பியாந்த தெரிவித்தார்.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பாலக்குடா கிராமத்தில் திருக்கோவில் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பி.ஹேரத் தலைமையில் பொது மக்கள் பிரச்சினைகளை ஆராயும் தற்காலிக பொலிஸ் காவல் அரண் ஒன்று நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறையில் 17 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்நோக்கம் மக்கள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக வாழ்தற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதே. வேறு நோக்கம் ஒன்றும் கிடையாது. இந்த சேவைக்கு தமிழ்,சிங்கள,முஸ்லிம் இன பேதங்கள் கிடையாது. அதேபோன்று இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவர்,பௌத்தர் என்ற மத வேறுபாடுகளும் கிடையாது. சட்டம், நீதி, ஒழுங்கு என்பன இந்த நாட்டில் எல்லோருக்கும் சமத்துவமானது. இதனை உறுதிப்படுத்துவதே பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமையாகும் என்றார்.
சமூகத்தில் பல ஆயிரக் கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இதனை இந்த சமூகத்தில் வாழுகின்ற மக்களுடன் மக்களாக பொலிஸாரும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து மக்களையும் நாட்டையும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திப்பதற்காக தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக இனங்களுக்கு இடையில் சந்தேக பார்வைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது நாட்டில் நல்ல சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதனை நாம் சரியாக கொண்டு ஒற்றுமையுடன் புரிந்துணர்வுகளுடனும் சட்டம்,ஒழுங்கை பின்பற்றி வாழுகின்ற ஒழுக்கம் கொண்ட சமூகமாக நாம் மாற்ற வேண்டும். இதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் நம்பிக்கையுடன் தங்களால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் 071-8591145 எனும் எனது தொலைபேசி மூலமாக தங்களின் பிரதேசங்களில் இடம்பெறும் பிரச்சினைகளை தெரியப்படுத்தவும் முடியும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago