2025 மே 12, திங்கட்கிழமை

மக்களிடம் கருத்துப் பெறல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை மக்கள் பங்களிப்புடனான வரவு - செலவுத்திட்டமாக தயாரிப்பதற்காக மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் தெரிவித்தார்.    

இதற்கமைவாக, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள 19 சனசமூக நிலையங்களின் நிர்வாகப் பிரதிநிகளிடம் கருத்துகள், ஆலோசனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு பொதுமக்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களிடம் மக்களின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டு, பிரதே சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் சபை அமரிவில் சமர்ப்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் 2020ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாத வண்ணம் நிறைவேற்றப்பமெனவும் தவிசாளர் தெரிவித்தார்.    

பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளைப் பெறுவதற்காக பிரதேச சபையின் செயலாளர், உள்ளூராட்சி உதவியாளர் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரகள், சனசமூக நிலையங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகவும் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X