Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மக்களின் நலன்கருதி அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கிகள் திறக்கப்பட்டு வங்கி உள்ளக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்மூலம் மக்களுக்கான கடனை வழங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தபட்டு, கடனும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கமைய இப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில், சுமார் 12 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடன் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்கிகளிலும் ,க்கடன்கள் வழங்கவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, சகன பியவர, அருநெலு எனும் பெயர்களில் ,க்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மக்கள் அதிகமாக ஒன்று கூடும் சமுர்த்தி வங்கியில், கிருமி தொற்றை நீக்கும் பொருட்டு, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையிலான குழுவினர் தொற்று நீக்கி மருந்தை விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு நிலையால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மயான அமைதி நிலவியதுடன் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கையைனயும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
4 hours ago