Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று வை.எம்.ஸி கூட்ட மண்டபத்தில் மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் ,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட,கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் லவினா சுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது,திராய்க்கேணி,ஒலுவில்,அட்டாளைச்சேனை,
அஸ்ரப் நகர்,கண்ணகிபுரம் மற்றும் விநாயகபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக அடிப்படை உரிமைகள், காணி சுவிகரிப்பு, துறைக அபிவிருத்தியினால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை,சுகாதார பிரச்சினைகள் போன்ற விடயங்கள் மக்களினால் எடுத்துக்கூறப்பட்டன.
இங்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் கூறுகையில்,
மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விதமான பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.மக்களின் வாழ்வாதாரத்துக்கான முன்னெடுப்புகளுக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்,காணிப் பிரச்சினை மற்றும் துறைமுக அபிவிருத்தியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ளேன்.
இன வேறுபாடுகளின்றி இந்த பிரேரணையை வெற்றியடையச் செய்வதுடன் அரசின் உயர் மட்டத்துக்கும் கொண்டு செல்லப்படும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக இந்த மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
15 minute ago
15 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
28 minute ago
39 minute ago