Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு நடமாடும் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல். சூரியபண்டார தெரிவித்தார்.
களி ஓடை, நெய்னாகாடு ஆற்றை அண்டிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் ஆற்றின் அணைக்கட்டுகள், விவசாயக் காணிகள், விவசாயப் பாதை என்பன சேதமுற்றுக் காணப்படுவதால் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடற்கரை பகுதிகளிலும் இரவு நேரங்களில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இச்சட்டவிரோத மணல்அகழ்வைத் தடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
11 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
59 minute ago
1 hours ago