2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மண் ஏற்றிய மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சம்மாந்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தில் வயல் மண் ஏற்றிய மூவர் உட்பட நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஐவரை, நேற்று புதன்கிழமை (09) இரவு கைதுசெய்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர் 

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்மாந்துறை அல்லி முல்லை வயல் பகுதியில் இரண்டு டிப்பர் வானம் மற்றும் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றுவதற்காக வாகன அனுமதியின்றி வயல் மண்னை ஏற்றிய மூவரை கைதுசெய்துள்ளதுடன் வானங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை, பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்து நீதிமன்றத்துக்குச் செல்லாது தலைமறைவாய  நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட இருவரை, நேற்று (09) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X