2025 மே 14, புதன்கிழமை

மதுபான விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஊரடங்கு சட்டம், இன்று (20) தளர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள கடைகள், தனியார், அரச வங்கிகள், பிரதேச செயலகங்கள், விவசாய திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.

மிக நீண்ட நாள்களுக்கு பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதால், மதுபான விற்பனை நிலையங்களில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றதுடன், அவர்களுக்கான இடைவெளியை பேணுவதில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதேபோன்று, சிகை அலங்கார நிலையங்களிலும் முடிவெட்டுவதற்காக பொதுமக்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் காணப்பட்டனர். 

வீதியின் பிரதான இடங்களில் வீதிப்போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டதுடன், இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X