2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’மத்தியஸ்த சபையில் ஆளணிப் பற்றாக்குறை’

Editorial   / 2018 மே 02 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

 

அம்பாறை, ஆலையடிவேம்பு மத்தியஸ்தர் சபையில் காணப்படும் ஆளணிப் பற்றாகுறை காரணமாக, மக்களிடையே எழுகின்ற பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என, அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில், 22 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கிய பெரும் பகுதிக்கான மத்தியஸ்தர் சபைக்கு, 22 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வந்தனர். மத்தியஸ்தர் சபை அங்கத்தவர்களின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், புதியவர்கள் பிரதேச செயலாளரின் அங்கிகாரத்துடன், நிதியமைச்சு நியமனங்களை வழங்கும்

இதற்கமைவாக, தற்போது வெற்றிடமாகவுள்ள 20 அங்கத்தவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப, பிரதேச செயலாளரும் நிதியமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகவுள்ளது.

புதியவர்களை நியமனம் செய்யும் போது அந்தந்தப் பிரிவு கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் இருந்து அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, தற்போது மத்தியஸ்த சபையில் உள்ள உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மத்தியஸ்தர் சபை ஆணைக்குழு, மாவட்ட ரீதியாக இவ்வாண்டு பெப்ரவரி மாதம், புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நேர்முகத் தேர்வுகளை, அந்தந்த பிரதேச செயலகங்களில் நடத்தியது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள மத்தியஸ்தர் சபைக்கு புதியவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், பிணக்குகளுக்கான தீர்வை ஈட்டுவதில் பாரிய காலதாமதம் நிலவுவதாக அறிய முடிகின்றது.

எனவே, புதிய உறுப்பினர்களை நியமிக்க, மத்தியஸ்தர் சபை ஆணைக்குழு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X