Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கில் செலுத்திய அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் அவரை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம் முஹமட் பஸீல் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் , மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை(04) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம் முஹமட் பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று மணல் ஏற்றிய அட்டாளைச்சேனை தச்சாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நீதிபதி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
12 minute ago
12 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
25 minute ago
36 minute ago