எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் 01 வருட கால மனையியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பயில்வதற்குத் தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள், 01.01.2020ஆம் திகதியன்று 17 வயதுக்குக் குறையாதவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும், தரம் 10 கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 03 வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகமையுடைய விண்ணப்பதாரிகள், நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை எனும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago