Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
“மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தார்” என, தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக தெரிவாகிய சப்றாஸ் மன்சூரை கௌரவிக்கும் விழா சனிக்கிழமை (27) இரவு கல்முனையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப் , இந்தப் பகுதியில் தொழில்நுட்பக் பயிற்சி கல்லூரியை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்து திறந்து வைக்க வந்த போது ஒரு காலத்தில் அவர் ஜனாதிபதியாக வருவார் என தெரிவித்திருந்தார்.
இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் தீர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தனியான அலகுகோரி நிற்கவில்லை. இந்த நாட்டில் 75 சதவீதமான சிங்கள பௌத்த மக்கள் இருக்கிறார்கள். 25 சதவீதமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள்.
ஆகவே 25 சதவீதமாக இருக்கின்ற சிறுபான்மை மக்களை வாழ வைப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு சிறிய நாடு இங்கு 9 மாகாணங்களும் சமஸ்டி கோரி நின்றால் இந்த நாடு பாதாளத்திற்கு செல்லும்.
இதனால்தான், சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இந்த சமஸ்டியை எதிர்க்கின்றனர். ரவூப் ஹ்க்கீம் நாடு கடந்த தமிழ் ஈழ அமைப்புகளின் ஊதுகுழலாக சமஸ்டியை கோரி செயற்படுகின்றார்.” என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago