2025 மே 14, புதன்கிழமை

மாடறுக்கும் மடுவத்தை மூட நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில்,  சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சகிதம் நேற்று (25) சென்று பார்வையிட்ட பின்னர் குறித்த மடுவத்தை மூட நடவடிக்கை மேற்கொண்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ரமழான் மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில் சுத்தமான இறைச்சிகளை வழங்குவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, சம்பந்தப்பட்டவர்கள் குறித்த மடுவத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் திறந்து விடுவதாகவும் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X