Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 28 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்களின் ஆளுமை குறிகாட்டியாக ஏட்டுக் கல்வியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில், பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று( 28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளில் ஒன்றாகவே ஆசிரியர் பணி கருதப்படுகின்றது. அப்பணியினை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் போதே ஆத்ம திருப்தியும், சமூகத்தில் நன்மதிப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்களிடம் மறைந்துகிடக்கும் ஆளுமைகளையும் திறமைகளையும், தலைமைத்துவ பண்புகளையும் அடையாளம் கண்டு சிறந்த நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதே சிறந்த கல்விப்பணியாகக் கருதப்படுகின்றது.
இன்று மாணவர்களின் ஆளுமை குறிகாட்டியாக வெறுமனே ஏட்டுக் கல்வி மாத்திரமே பார்க்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இதனையே இன்று இலக்காகக் கொண்டு அனைத்து பாடசாலைகளும் போட்டி மனப்பாங்குடன் அனைத்து வளங்களையும் பிரயோகிப்பதை காணக் கூடியதாகவும் உள்ளது. இதனால் மிகவும் குறைந்த சதவீதத்திலான மாணவர்கள் மாத்தரமே தமது இலக்கையும், அடைவு மட்டத்தினையும் பெறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .