Janu / 2024 மார்ச் 10 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மற்றும் புறச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொண்டு அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தி அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலை மாணவர்களுடன் தொடர்புபட்ட கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதன்கிழமை (06) , வியாழக்கிழமை (07) ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளது .
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு குறித்த பயிற்சி செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது .
பாடசாலை மாணவர்களின் உளநல ஆரோக்கியம், பாடசாலை பருவத்தில் நிகழும் உடல், உள மாற்றங்கள், சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம், மாணவர்களை பகடிவதை செய்தல், தகவல் தொழில்நுட்பமும் அதன் ஊடாக ஏற்படும் சாதக பாதகங்களும், போதைவஸ்து பாவனையில் ஈடுபடுவதற்கான அடிப்படை காரணங்களும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளும், விசேட தேவையுடைய பிள்ளைகளை கன்டறிதலும் மருத்துவ ஆலோசனையும் என இந்நிகழ்வின் போது பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றப்பட்டுள்ளது .
றியாஸ் ஆதம்
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago