2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்த இருவர் கைது

Freelancer   / 2025 ஜனவரி 04 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகநபர்கள் இருவருடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கல்முனை விசேட அதிரடிப் படையினரால், 20 மற்றும் 19 வயதுடைய மருதமுனை பகுதியை சேர்ந்த இவர்கள் நேற்று இரவு ஐஸ் போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து மொத்தமாக 2,460  மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

அத்துடன், கைதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .