Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏயெஸ் மௌலானா
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நெய்னா முஹம்மத், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமாக் கடிதத்தை, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் கையளித்துள்ளார்.
இவர், கடந்தாண்டு மேலதிக பட்டியல் மூலம் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் சுழற்சி முறையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மற்றொரு வேட்பாளருக்கு இடமளிப்பதற்காகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபையின் தற்போதைய நடப்புச் சபையில் இதற்கு முன்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினராக இருந்த ஏ.ஜி.எம்.நதீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த வை.கே.ரஹ்மான், தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் இதே அடிப்படையில் இராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
17 minute ago