2025 மே 15, வியாழக்கிழமை

மானிய அடிப்படையில் நிலக்கடலைகள் பகிர்ந்தளிப்பு

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி, மணல்சேனையில், நிலக்கடலை உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 200 ஏக்கர் நிலக்கடலை செய்கைக்கான நிலக்கடலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

பொத்துவில், கோமாரி கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில், இன்று (09) நடைபெற்ற இந்நிகழ்வின் போது, நிலக்கடலை செய்கை முறை தொடர்பாக தொளிவான விளங்கங்களும் விவசாய போதனாசிரியர்களால்  அளிக்கப்பட்டன.

ஒரு நிலக்கடலை செய்கையாளர்களுக்கு தலா 40 கிலோகிராம வீதம் 200 பேருக்கு நிலக்கடலைகள் இதன்போது விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, வைபவ ரீதியாக விவசாயிகளுக்கு நிலக்கடலைகளை பகிர்ந்தளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .