Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கு அட்டாளைச்சேனை - கோணாவத்தை ஆற்றில் மீனவர் இறங்குதுறையை அமைப்பதற்கு, கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் பி.ஹரிஸனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதற்கு இறங்கு துறை இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்றொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
ஒலுவில் துறைமுகத்தையும் மீன்பிடித் துறைமுகத்தையும் முழு வசதிகளும். கொண்ட மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய குழு இது பற்றிக் கலந்துரையாடியது. இந்தத் துறைமுகம் தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.
இந்த ஆய்வறிக்கை கிடைக்கும் வரை அட்டாளைச்சேனை கோணாவத்தையில் படகுகளைத் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் பி.ஹரிசன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன பெர்னாண்டோவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
3 hours ago