எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் ஜலால்டீன் சதுக்கக் கடற்கரையில் அமைந்துள்ள கரைவலை மீனவர் வாடியொன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், ஒருவர் தீக்காயங்களுடன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனனரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று (14) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
வாடி உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாடி முற்றுமுழுதாக எரிந்துள்ளதோடு, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலை, மீன்பிடி உபகரணங்களும் எரிந்து சாம்பராகியுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே, இந்தத் தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென, ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாக, பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பாக, பொத்துவில் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026