Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கரையோர மீனவர்கள், தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள எந்தவிதத் தடைகளும் இல்லை என அம்பாறை மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர்கள், பிரதே சபை தவிசாளர்கள் உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட 24 படைப்பிரிவின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே கலந்துகொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வது, ஒன்றுகூடுவது, ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் இராணுவ தளபதியால் தெளிவுபடுத்தப்பட்டன.
அதேவேளை, “அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுய தனிமைப்படுத்தில் இருந்த காரணத்தால் ஏனைய பிரதேசத்துக்கு பரவாமல் இருந்தது. அதுபோன்று, நாம் மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
“பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியைப் பெற்று, மண்வெட்டியுடன் அலுவலகத்துக்கு செல்வது போன்று ஆடைகளுடன், வீதியில் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும்” என, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு, அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவால் அறிவுரை வழங்கப்பட்டது.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago