Princiya Dixci / 2021 ஜூலை 08 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பிரிவின் ஊடாக மீனவர் ஒருவருக்கு, ஆழ்கடல் மீன்பிடி வள்ளம் மற்றும் நான்கு பயனாளிகளுக்கு வீடுகள் என்பன கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வுகள், கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருக்கோவில் பிரதேச செயலக தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் நேற்று (07) நடைபெற்றன.
இந்த ஆழ்கடல் மீன்பிடி வள்ளம் மற்றும் வீடுகள் என்பன சமூர்த்தி லொத்தர் சீட்டிழுப்பின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டிருந்த சமூர்த்திப் பயனாளிகளுக்கு தலா 2 இலட்சம் பெறுமதியான நிதிகள் வழங்கப்பட்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரமத அதிதியாக கலந்து கொண்டார்.
14 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago