2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீளக் குடியமர்த்துமாறு 83 நாளாகவும் தொடரும் போராட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள்,  தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு, கடந்த ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்புப் போரட்டம், 83 நாள்களாக இன்றும் (04) தொடர்ந்தது.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து, 2009ஆம் ஆண்டு தமது சொந்த இடமான ஊறணி - கனகர் கிராமத்துக்குத்  திரும்பியவேளை, பிரஸ்தாப பிரதேசம், வனவிலங்கு இலாகாவுக்கும் இராணுவக்கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டிருப்பதாக தெரிவித்து, தங்களை மீளக் குடியேறாமல் தடுத்து விட்டார்கள் என, கனகர் கிராமத்தின் முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் செயலாளருமான வேலுப்பிள்ளை அருணாச்சலம் தெரிவித்தார்.

1979ஆம் ஆண்டு, அரசாங்க அதிபரால் தங்களுக்கு காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள், கனகர் கிராமத்தின் வாக்காளர் இடாப்புகள், பாதிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட புனர்வாழ்வு அட்டை மற்றும் விவசாயச் செய்கைக்கான அனுமதிப்பத்திரங்கள் என்பன தங்களிடம் ஆவணமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தமது சொந்தக் காணியைப் பெறும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .