Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 28 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஒலுவில் துறைமுக மீள் குடியேற்ற வீட்டுத் திட்டத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியை மீள் குடியேற்ற கிராமத்தின் பொதுத் தேவைக்கு வழங்குமாறு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் பொதுமக்கள் இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 16 வருடங்களாக இவ் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லையென, அம்மக்கள் குற்றஞ்சாட்டினார்.
இங்கு பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியை துறைமுக அதிகார சபையினால் தனியாருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், இக் காணியை பொதுத் தேவைகளுக்காக வழங்குமாறு வலியுறுத்தியும் இவ் வீட்டுத் திட்டத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரியே, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago