Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து முகத்துவாரத்தை வெட்டிய விசமிகள் நால்வரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
இன்று (26) பலத்த மழை பொழிந்துகொண்டிருக்கையில் காரைதீவு, நிந்தவூர் எல்லையிலுள்ள வெட்டுவாய்க்காலில் கரைபுரண்டோடிய வெள்ளநீரை கடலுக்குள் சட்டவிரோதமாக வழமைக்குமாறாகப் பிழையான இடத்தில் வெட்டிவிட்ட விசமிகள் நால்வரே, இவ்விதம்தேடப்படுகிறார்கள்.
வெட்டி ஒரு சில நிமிடங்களில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் தகவல்கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து பிரதேச செயலகம் கரையோரப் பாதுகாப்பு அதிகாரி, சக உறுப்பினர்களுக்குத் தகவல் கொடுத்து ஸ்தலத்துக்கு விரைந்தார்.
அங்கு சென்றதும் வழமைக்கு மாறாக ஊரைப் பாதிக்கும் வண்ணம் ஊர்ப் பக்கமாக முகத்துவாரம் விசமிகளால் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனே வெட்டிய பாகத்தை மூடுமாறு உத்தரவிட்டார். அதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இல்லாவிட்டால் ஊர் வௌ்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலை ஏற்படிருக்கும்.
இவ்விடயம் குறித்து, பிரதேச சபை உறுப்பினர் சி.ஜெயராணி, சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வழமையாக பிரதேச சபை, பிரதேச செயலகம், கரையோரப் பாதுகாப்பு அதிகாரி சகிதம் முகத்துவாரம் வெட்டுவது வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago