Editorial / 2019 நவம்பர் 29 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் நீடித்துவரும் மழை காலநிலை காரணமாக, நீர்நிலைகளில் மட்டம் அதிகரித்துள்ளதால், ஆறுகள், குளங்கள், களப்புகளில் முதலைகளில் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்துள்ளனா்.
இது தொடர்பில் அச்சமான நிலைமைகள் காணப்படுமாயின் உடன் அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.
அம்பாறை- அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றிலிருந்து, நேற்று (27) இரவு வெளியேறிய இராட்சத முதலை, பாதையை ஊடறுத்து ஊருக்குள் நுளைய முட்பட்டதால், மக்கள் பதட்டமடைந்தனா்.
மேற்படி முதலையானது, கோணாவத்தை பாலத்தடி வீதியை ஊடறுத்து ஊருக்குள் நுளைய முட்பட்ட போது, மக்கள் மத்தியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டதுடன், அதனை செல்லவிடாது இரும்புவலை வைத்து தடுத்து நிறுத்தினர்.
இரவு 8.30 மணியளவில் வீதிக்கு வந்த சுமார் 10 அடி நீளமான இந்த இராட்சத முதலையைப் பார்ப்பதற்கு, இரவு 10.30 மணிவரையில் அதிகளிவிலான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, உடன் பொலிஸார் அங்கு வருகை தந்ததுடன், வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.
அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸாரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இணைந்து முதலையை பாதுகாப்பான முறையில் பெக்கோ கனரக வாகனத்தின் உதவியுடன் உளவு இயந்திரப் பெட்டியில் ஏற்றி கழியோடை ஆற்றில் விடுவதற்காகக் கொண்டு சென்றனர்.



23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026