எஸ்.கார்த்திகேசு / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 16 மடுவம் அமைந்துள்ள நீரோடையில் சுமார் 20க்கும் மேற்பட்ட முதலைகள் நடமாடுவதாகவும் இதன்காரணமாக இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்ந்து வரும் மழை காரணமாக எங்கும் மழை நீர் நிரம்பிக் காணப்படுவதனால் மதுரம் சேனைக் குளத்தில் உள்ள முதலைகள், நீர் ஓடைகளினூடாக மடுவம் பகுதியில் உள்ள மாடுகளின் கழிவுகளை உண்பதற்காக வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர் ஓடையில் முதலைகள் நிறைந்து காணப்படுவதால் கால்நடைகள், மீனவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவம் அதேவேளை நீரோடைக்கு அருகில் குடியிருப்புகள், வயல் காணிகள் இருப்பதனால் தமக்கு முதலைகளின் அச்சம் கூடுதலாக இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago