2025 மே 02, வெள்ளிக்கிழமை

முதல் இதழியல் வெளியீடு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் 'இலங்கை தொழில்நுட்பவியல் இதழ்' எனும் முதலாவது இதழியல், ஒலுவில் வளாகத்தில் இன்று (31) வெளியீட்டு வைக்கப்பட்டது.

தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கலந்துகொண்டு, வைபவ ரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டு 04 வருடங்கள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு, இலங்கை தொழில்நுட்பவியல் இதழ் முதலாவதாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வசதியான சர்வதேச மட்டத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை 06 மாதத்துக்கு ஒருமுறை வெளியிடுமென பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பீடாதிபதி கலாநிதி ரமீஸ் ஏ.அபூபக்கர், பல்கலைக்கழக பிரதான நூலகர் எம்.எம். றபாயுடீன், தொழில்நுட்பவியல் பீடத்தின் திணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .