2025 மே 12, திங்கட்கிழமை

முத்துகளுடன் இருவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில், யானைத் தந்தத்திலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான முத்துகள் மூன்றுடன் சந்தேகநபர்கள் இருவர், நேற்று  (08) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பகுதியில் இருந்து விற்பனைக்காகக் கொண்டு சென்ற போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த முத்துகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X