Editorial / 2020 மே 13 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
தமது விருப்பத்துக்கு மாறாக தனது காணிகளில் தொடர்ச்சியாக கரும்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதால், தான் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டி, அட்டாளைச்சேனை ஆலம்குளம் பகுதியில் நேற்று (12) கரும்புச் செய்கை ஆரம்பிக்கப்பட்டபோது, கரும்புச் செய்கையாளர்களுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தப் பதற்ற நிலையை அடுத்து அப்பகுதிக்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார், நிலைமையை சுமூகமாக்கியதுடன், நாளை (14) அம்பாறை மாட்டச் செயலாளருடன் கலந்துரையாடி, இவ்விடயம் தொடர்பில் சுமூக தீர்வைப் பெறும் வரை இப்பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த கரும்புச் செய்கையையும் இடைநிறுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கும் கல்லோயா பெருந்தோட்ட தனியார் கம்பனி நிர்வாகிகளுக்கும் இடையே சுமூகமான தீர்வு எட்டப்படாமல் உள்ளமையே இந்த முறுகல் நிலைக்குக் காரணமெனத் தெரியவருகின்றது.
14 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago