2025 மே 12, திங்கட்கிழமை

முள்ளந்தண்டு தொடர்பான சத்திர சிகிச்சை வெற்றி

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில், முள்ளந்தண்டு  தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியொருவர், முள்ளந்தண்டின் இடைத்தட்டு விலகியதன்  காரணமாக நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயால்  பாதிக்கப்பட்திருந்தார். இதனால் இவரது நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எனவே,  இவருக்கு முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை (LAMINECTOMY) மேற்கொள்ளவேண்டியேற்பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் வழிகாட்டலில், வைத்தியசாலையின் எலும்பு முறிவு  சத்திரசிகிச்சை  நிபுணர்  வைத்தியர் கே.காண்டீபன் தலைமையிலான வைத்திய குழுவினர், இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக  மேற்க்கொண்டனர்.

இவ் வைத்தியசாலையில் முதன் முறையாக இந்த  சத்திர சிகிச்சை   மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X