Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 09 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம், எஸ்.அஷ்ரப்கான், நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில், "தேசிய அரசியலில் அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் புரட்சி” எனும் தொனிப்பொருளிலான பொதுக்கூட்டம், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக நேற்று (08) இரவு நடைபெற்றது.
“சாய்ந்தமருத்துக்கு நகரசபை எனும் கனவை நனவாக்க உதவிசெய்வோரை, தோளில் சுமப்போம்” என சாய்ந்தமருதால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு ஏற்ப, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் முயற்சியால் சாய்ந்தமருதுக்கான நகரசபை வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது. (பின்னர் அது தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.)
அதற்கான நன்றிக் கடனாக நேற்று முன்தினமிரவு மாளிகைக்காடு ஸைத் பின்த் தாபித் பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பித்து, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரை வாகன பவனியாக, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் அழைத்து வரப்பட்டு, இளைஞர்களாலும் ஊர் மக்களாலும் மேடையேற்றப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஹ்வை தேசிய தலைவராக அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago