Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து, நேற்று, தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, இரு ட்ரக் வண்டிகளில் சுமார் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறித்த தேடுதலில் ஈடுபட்டனர்.
நேற்று (27) மாலை 4 மணி முதல் குறித்த தேடுதல் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை - சாய்ந்தமருது பகுதி எல்லையில் அமைந்துள்ள மையவாடி, தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களை பயன்படுத்தி இராணுவத்தினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த பகுதி வீதிகள் இராணுவத்தினரால் போக்குவரத்துக்காக மறிக்கப்பட்டதுடன், செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எனினும், எதுவித ஆயுதங்களோ தடயப்பொருள்களோ குறித்த தேடுதலில் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago