Princiya Dixci / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
மூடப்பட்ட காரைதீவு சதொச மீண்டும் திறக்கப்படுமா எனப் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
கடந்த காலங்களில் இயங்கிவந்த காரைதீவு சதொச விற்பனை நிலையம் கடந்த வருடம் மூடப்பட்டதனால் இப்பிரதேச மக்கள் அரசு அறிவிக்கும் நிவாரண விலைகளில் பொருள்கள் எதனையும் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
கொவிட் பெருந்தொற்றுக் காலப்பகுதியில் சதொச விற்பனை நிலையங்களின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. காரைதீவு சதொச கிளை மூடப்பட்டதால் மேற்குறிப்பிட்ட மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
எனவே, சதொச காரைதீவுக் கிளையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் சதொச விற்பனை நிலையங்கள் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
37 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago