2025 மே 15, வியாழக்கிழமை

மூத்த கல்வியலாளர் காலமானார்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

கல்வியலாளரும், ஓய்வுபெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளருமான முகம்மது ஹனிபா காதர் இப்றாஹிம், நேற்று (23) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 ஆகும்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர், பொத்துவில் பிரதேசத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளராவும் கடமையாற்றியுள்ளார்.

மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்  கல்வி வளர்ச்சிக்கும், மருதமுனையின் கலை, இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்திருந்தார். 

இலங்கை கல்வி நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்திபெற்று கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்று, கல்முனை கல்வி வலயத்தில் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி, 2004ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

இவரது ஜனாஸா, நேற்று இரவு 9.30மணிக்கு பெரியநீலாவணை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீபின் மாமனார் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .